“அடிப்பாவி.. இரவில் கொடுத்த ஒரு டம்ளர் பால்…” கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியின் கொடூர சதி… பதறவைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடிப்பாவி.. இரவில் கொடுத்த ஒரு டம்ளர் பால்…” கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியின் கொடூர சதி… பதறவைக்கும் பின்னணி..!!

Published

on

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவியும் அவளது காதலனும் இணைந்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் முசாபர்நகரின் ரத்தன்புரி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்துள்ளது. உயிரிழந்த நபர் சாகிப் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது மனைவி தபஸ்ஸும் என்பவருக்கும், அவரது நாத்தனார் கணவரான ஷாரூக் என்பவருக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்த விஷயம் கணவன் சாகிப்பிற்குத் தெரியவந்ததால், அவர் இருவரின் சந்திப்பிற்கும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து இடையூறாக இருந்துள்ளார்.

இதன் காரணமாக கணவனை வழியிலிருந்து அகற்ற மனைவியும் அவளது காதலனும் சேர்ந்து சதித்திட்டம் தீட்டினர். திட்டப்படி, காதலன் ஷாரூக்கிடமிருந்து மயக்க மாத்திரைகளை வாங்கி வந்த தபஸ்ஸும், செப்டம்பர் 7-ஆம் தேதி இரவில் பால் சாப்பிடும் பழக்கம் கொண்ட தனது கணவன் சாகிப்பிற்கு அந்த மாத்திரைகளை பாலில் கலந்து கொடுத்துள்ளார். நச்சு மாத்திரை கலந்த பாலைக் குடித்துவிட்டு உறங்கச் சென்ற சாகிப், மறுநாள் காலையில் எழுந்திருக்கவே இல்லை. செப்டம்பர் 8-ஆம் தேதி சாகிப் சடலமாகக் கிடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

Advertisement

பிரேதப் பரிசோதனை அறிக்கையில் பாலில் நச்சு மாத்திரைகள் கலந்து கொடுக்கப்பட்டதால் தான் மரணம் நிகழ்ந்தது என்பது உறுதியானது. சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் மனைவி தபஸ்ஸுமிடம் தீவிர விசாரணை நடத்தினர். ஆரம்பத்தில் காவல்துறையை திசைதிருப்ப முயன்ற அவர், பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு தன் காதலன் ஷாரூக்கின் பங்கையும் வெளிப்படுத்தினார். இதனையடுத்து காதலன் ஷாரூக்கையும் காவல்துறையினர் கைது செய்தனர். முசாபர்நகர் மூத்த காவல் கண்காணிப்பாளர் (SSP) சஞ்சய் குமார் வர்மா இக்கொலை வழக்கின் பின்னணியை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தி, இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in