CRIME
“உங்க தங்கச்சி தூக்குப்போட்டு இறந்துட்டா..!” கர்ப்பிணி மனைவி தற்கொலை என நாடகமாடிய கணவன்… ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கவனித்த ‘அந்த’ ஒரு ரகசியம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
மதுரை திருப்பரங்குன்றம் அருகே, காதல் திருமணம் செய்து கொண்ட 21 வயது கர்ப்பிணிப் பெண்ணான விஜயலட்சுமியை அவரது கணவர் கோபிநாத் மதுபோதையில் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகும் இத்தம்பதியினர், குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 40 நாட்களுக்கு முன்புதான் தேவி நகர் பகுதியில் தனிக்குடித்தனம் வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி நள்ளிரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த கோபிநாத், விஜயலட்சுமியுடன் தகராறில் ஈடுபட்டு ஆத்திரத்தில் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், கொலையை மறைப்பதற்காக விஜயலட்சுமியின் அக்காவுக்குத் போன் செய்து, “உங்கள் தங்கச்சி தூக்குப்போட்டு இறந்துவிட்டார்” எனக் கூறி ஏமாற்ற முயன்றுள்ளார்.
தகவலறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விஜயலட்சுமியின் உடலைச் சோதித்துவிட்டு, அது தற்கொலை அல்ல என சந்தேகித்து ஆம்புலன்ஸில் ஏற்ற மறுத்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். அதன் பின்னர், அக்கம் பக்கத்தினர் அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது. திருநகர் காவல் நிலைய போலீசார் கோபிநாத்திடம் நடத்திய தீவிர விசாரணையில், அவரே மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொன்றதை ஒப்புக்கொண்டார். திருமணமாகி 3 ஆண்டுகளிலேயே கர்ப்பிணிப் பெண் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்ததால், இந்த வழக்கு தற்பொழுது கோட்டாட்சியர் (RDO) விசாரணைக்குப் பரிந்துரைக்கப்பட்டு, கோபிநாத் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
