CRIME
“அடச்சீ நீயெல்லாம் மனுஷியா..!” பெற்ற தந்தை என்றும் பார்க்காமல் துப்பாக்கியை நீட்டிய மகள்.. நடந்தது என்ன..? நெஞ்சை பதறவைக்கும்வீடியோ…!
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தின் சாஹிபாபாத் பகுதியில், தனது கார் கடனுக்கு ஜாமீன் கையெழுத்து போட மறுத்த சொந்தத் தந்தையையும் அண்ணியையும் ஒரு பெண் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய திடுக்கிடும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகனக் கடனைச் சரிபார்க்கும் ஆவணங்களில் கையெழுத்திட தந்தை மறுத்ததால், இவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கடுமையான தகராறாகவும், கைகலப்பாகவும் மாறியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த இளம் பெண், வீட்டில் இருந்தவர்களுடன் சண்டையிட்டுவிட்டு அங்கிருந்து தற்காலிகமாக வெளியேறியுள்ளார்.
ஆனால், சம்பவ இடத்திலிருந்து சென்ற அந்தப் பெண், சுமார் 25 நிமிடங்களுக்குப் பிறகு தனது நண்பர் ஒருவரை உடன் கூட்டிக்கொண்டு மீண்டும் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். வீட்டின் பிரதான வாசலை வலுக்கட்டாயமாக உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த அந்தப் பெண், தனது தந்தை மற்றும் அண்ணியின் மீது திடீரென துப்பாக்கியை நீட்டி, தங்களைக் சுட்டுக் கொன்றுவிடுவதாகக் கொடூரமாக மிரட்டத் தொடங்கியுள்ளார். குடும்பத்திற்குள்ளேயே சொத்து அல்லது கடன் விவகாரத்திற்காகப் பெற்ற தந்தை மீதே துப்பாக்கியை நீட்டிய இந்த அதிர்ச்சியூட்டும் குற்றச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
