“ஐயோ கடவுளே.. மகனின் கண்முன்னே துடிதுடித்த தந்தை..” பட்டப்பகலில் நடுரோட்டில் மர்ம கும்பலின் வெறிச்செயல்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“ஐயோ கடவுளே.. மகனின் கண்முன்னே துடிதுடித்த தந்தை..” பட்டப்பகலில் நடுரோட்டில் மர்ம கும்பலின் வெறிச்செயல்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!

Published

on

அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள பசாய் கிராமத்தைச் சேர்ந்த துணிக்கடை அதிபரான மகேந்திரா (45) என்பவர், அவரது இளைய மகனின் கண் முன்னாலேயே மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை 9.30 மணியளவில் மகேந்திரா மற்றும் அவரது மகன் சாஹில் ஆகிய இருவரும் தங்களது துணிக்கடையைத் திறப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது இவர்களை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத மூன்று மர்ம நபர்கள், இவர்களது வாகனத்தை வழிமறித்து மிக அருகில் இருந்து மகேந்திராவை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மகேந்திராவை அவரது மகன் சாஹிலும் அங்கிருந்த பொதுமக்களும் மீட்டு உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்; எனினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இக்கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள குருகிராம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மகேந்திராவின் மூத்த மகன் பிரியான்ஷ் கடந்த 2025-ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் சிறையில் இருப்பதால், அவரைப் பழிவாங்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தை அடுத்து தப்பியோடிய மர்ம நபர்களைப் பிடிக்க காவல்துறையினர் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in