CRIME
கள்ளக்குறிச்சியில் கொடூரம்: அரசுப் பள்ளி ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லை… 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை..!!
கள்ளக்குறிச்சி அருகே அரசுப் பள்ளி ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லை காரணமாக 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள அரசுப் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ஜெகதீசன் என்பவர், அந்த மாணவிக்கு நீண்ட நாட்களாகத் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடுமையான மன உளைச்சலுக்கும் வேதனைக்கும் ஆளாகியிருந்த மாணவி, ஆசிரியரின் கொடுமை தாங்க முடியாமல் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
மாணவியின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் உடனடியாகச் செயல்பட்ட போலீசார், ஆசிரியர் ஜெகதீசனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவிகளுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய ஆசிரியரே இந்த அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று மாணவியின் உறவினர்களும் பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
