அதெப்படி அமைச்சரான 3 மாதத்தில் இவ்ளோ பெரிய வீடு..? மக்களின் வரிப்பணத்த கொள்ளையடிக்குறீங்களா..? அமைச்சர் ராஜ்மோகன் குறித்து பரவும் வீடீயோவின் உண்மை பின்னணி…! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அதெப்படி அமைச்சரான 3 மாதத்தில் இவ்ளோ பெரிய வீடு..? மக்களின் வரிப்பணத்த கொள்ளையடிக்குறீங்களா..? அமைச்சர் ராஜ்மோகன் குறித்து பரவும் வீடீயோவின் உண்மை பின்னணி…!

Published

on

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அமைச்சரான மூன்றே மாதங்களில் மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடித்து சென்னையில் பிரம்மாண்டமான வீடு ஒன்றை வாங்கியதாகக் கூறி, வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “மூணே மாசத்துல இவ்வளவு பெரிய வீடு எப்படி வாங்க முடியும், மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கத் திட்டம் போடுகிறார்கள்” என்ற கடுமையான விமர்சனங்களுடன் நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து வந்தனர்.

இந்த வைரல் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்தபோது, இது முற்றிலும் தவறான மற்றும் திட்டமிட்டுப் பரப்பப்படும் வதந்தி என்பது தெரியவந்துள்ளது. இந்த வீடியோ தற்போதையது அல்ல; அமைச்சர் ராஜ்மோகனின் மனைவி கவிதா ராஜ்மோகன் தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் கடந்த ஜனவரி 27, 2025 அன்றே வெளியிட்ட பழைய வீடியோ என்பது கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement

அமைச்சராகப் பதவியேற்பதற்கு முன்பே எடுக்கப்பட்ட, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் பழமையான ஒரு வீடியோவை தற்போதைய புதிய வீடியோ போலச் சித்தரித்துள்ளனர். அரசியல் உள்நோக்கத்தோடு, தமிழக மக்களின் வரிப்பணத்தில் இந்த சொகுசு வீடு வாங்கப்பட்டதாகக் கூறி பரப்பப்படும் இத்தகவல் முற்றிலும் உண்மைக்குப்புறம்பானது என்று ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in