LATEST NEWS
“2009-ல் மத்திய அமைச்சர் பதவி… திருமாவளவனை தடுத்து நிறுத்திய அந்த ‘மர்ம நபர்’ யார்..?” சோனியா காந்தி போட்ட பிளான் உடைந்தது எப்படி..?!
கடந்த 2009-ஆம் ஆண்டில் தம்மை மத்திய வனத்துறை அமைச்சராக நியமனம் செய்ய சோனியா காந்தி முடிவு செய்திருந்ததாகத் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், இந்தத் தகவலை காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தன்னிடம் நேரில் பகிர்ந்துகொண்டதாகவும், ஆனால் இறுதியில் அந்த வாய்ப்புத் தனக்குக் கிடைக்காமல் கைநழுவிப் போனதாகவும் கூறினார்.
மேலும் இது குறித்துக் காங்கிரஸ் தரப்பில் விசாரித்தபோது, அந்த வாய்ப்பு தடுத்து நிறுத்தப்பட்டதாகவே தமக்கு பதில் கிடைத்ததாகவும் கூறி ஓர் அதிர்ச்சியளிக்கும் தகவலை அவர் பொதுவெளியில் வெளியிட்டுள்ளார். இதனால், அந்தப் பதவியை ஏற்றுக்கொள்வதைத் தடுத்தது யாராக இருக்கும் என்ற கேள்வியும் விவாதமும் தற்போதைய அரசியல் சூழலில் பெருமளவில் எழுந்துள்ளது.
