LATEST NEWS
“நான் போட்டியிடவில்லை… நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன்..” வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த திருமாவளவன்..!!
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தான் போட்டியிடுவதாக வெளியான தகவல்கள் முற்றிலும் வதந்திகளே என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெளிவுபடுத்தியுள்ளார். அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், வரவிருக்கும் இடைத்தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்பதில் தனது நிலைப்பாடு உறுதியாக உள்ளது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
முன்னதாக, திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி வேட்பாளராக திருமாவளவனை களமிறக்கி, தேர்தல் வெற்றிக்குப் பிறகு அவருக்கு அமைச்சரவையில் முக்கியப் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் பரவின. தற்போது அந்தச் செய்திகளுக்கு திருமாவளவன் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
