LATEST NEWS
“ஸ்டாலின் சார்.. அங்க மட்டும் நிக்கவே நிக்காதீங்க..” பகிரங்கமாக எச்சரித்த விசிக தலைவர்..! கொளத்தூர் நிலவரம் குறித்து கசியும் உண்மைகள்..!!
பேரவைத் தேர்தலின்போது கொளத்தூர் தொகுதிக்குப் பதிலாக வேறு தொகுதியில் போட்டியிடுமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்ததாகக் கூறி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொளத்தூர் தொகுதியில் சுமார் 1 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், அங்கே போட்டியிட்டால் அவர் தோல்வியடைய நேரிடும் என்று ஒரு பெண் தன்னிடம் நேரடியாகக் கூறியதாகவும் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கொளத்தூர் தொகுதியின் தற்போதைய நிலவரம் குறித்தும், மக்கள் மத்தியில் உள்ள கருத்துகள் குறித்தும் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோரிடம் முன்பே தான் எச்சரித்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். தேர்தல் கள நிலவரங்கள் மற்றும் வாக்காளர் பட்டியல் விவகாரங்கள் குறித்து அவர் எழுப்பிய இந்த கருத்துகள் தற்போது அரசியல் அரங்கில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
