CRIME
“இது என்ன கொடுமை..” காவல் நிலையம் முன் மகனின் சடலத்தை வைத்து போராடிய குடும்பம்.. நடந்து என்ன..? நெஞ்சை உறையவைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி சதர் பஜார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், துர்கா பூஜை பந்தல் அருகே குடும்பத்துடன் பலூன் விற்றுக் கொண்டிருந்த ஒரு சிறுவன் அரிசி ஏற்றி வந்த லோடர் வாகனத்தால் நசுக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தான். இந்தத் துயரச் சம்பவத்திற்குப் பிறகு, விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரை போலீசார் எளிதாகத் தப்பிக்க விட்டுவிட்டதாகக் குற்றம் சாட்டி, சிறுவனின் குடும்பத்தினர் அவனது உடலை காவல் நிலையத்திற்கு வெளியே சாலையில் வைத்து விடிய விடிய அதிரடிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
சிறுவனின் மரணத்திற்கு நீதி கேட்கும் இப்போராட்டம் குறித்துத் தகவல் அறிந்த ஜான்சி மூத்த காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பத்தினரைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். தப்பியோடிய ஓட்டுநரைக் கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து குடும்பத்தினர் தங்களது போராட்டத்தைக் கைவிட்டனர். பண்டிகைக் காலத்தில் நடந்த இந்த அகால மரணம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
