CRIME
“என் மகனை சித்திரவதை செய்து கொன்றுவிட்டார்கள்..!” விபத்து என்று காதலி ஆடிய நாடகம்.. நேரில் பார்த்த தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. நடுங்க வைக்கும் சம்பவம்..!!
உத்தரப் பிரதேசத்தின் தலைநகரான லக்னோவின் ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில், 28 வயதான கஃபே உரிமையாளர் ஷிவா ஷர்மாவின் மர்ம மரணம் தொடர்பான வழக்கு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷிவாவின் மரணம் ஒரு விபத்து அல்ல, அது திட்டமிட்ட கொலை என்று அவரது தாய் ரஞ்சனா ஷர்மா குற்றம் சாட்டியுள்ளார். ஷிவாவுடன் லிவ்-இன் உறவில் சேர்ந்து வாழ்ந்த அவரது காதலி ஸ்ரத்தா துபே, அவரது சகோதரி மற்றும் ஓட்டுநர் ஆகியோரே இந்த கொடூரக் கொலைக்குக் காரணம் என்று தாய் ரஞ்சனா காவல் நிலையத்தில் பரபரப்புப் புகார் அளித்துள்ளார்.
தனது மகனுக்கு விபத்து ஏற்பட்டுவிட்டதாகக் கூறி ரஷ்மி துபே என்ற பெண்ணிடமிருந்து இரவு 8 மணியளவில் தமக்கு அழைப்பு வந்ததாக ரஞ்சனா ஷர்மா தெரிவித்துள்ளார். ஆனால், அவர்கள் மருத்துவக் கல்லூரி அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்றபோது, அங்கிருந்த ஸ்ரத்தாவின் ஓட்டுநர் சௌரப் காஷ்யப் இவர்களைப் பார்த்ததும் தப்பியோடியுள்ளார். மேலும், தங்களை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கடந்த மூன்று மணி நேரமாக அலைக்கழித்ததாகக் கூறிய தாய், மருத்துவமனைக்குள் சென்று பார்த்தபோது தனது மகன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்ததாகக் கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.
இறந்த ஷிவாவின் உடல் முழுவதும் கொடூரமான தாக்குதல் காயங்கள் இருந்ததாகவும், காதுகளில் இருந்து இரத்தம் வழிந்து, கண்கள் வீங்கிய நிலையில் தாடை மற்றும் கால் உடைந்திருந்ததாகவும் அவரது தாய் புகாரில் விவரித்துள்ளார். அதோடு, அவனது உடல் முழுவதும் சிகரெட் தீக்காயங்கள் இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அதிர்ச்சிப் புகாரின் அடிப்படையில் ஸ்ரத்தா துபே, ரஷ்மி துபே, ஓட்டுநர் ஆதில் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீசார் கடுங்குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில், இது விபத்தா அல்லது சதியா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
