“கொடிய அரக்கன் செத்துட்டான்” நானா படேகர் மறைவால் கொந்தளிக்கும் தனுஸ்ரீ தத்தா.. அகில இந்திய திரைப்படத் தொழிலாளர் சங்கம் கடும் கண்டனம்..!! – cinefeeds
Connect with us

CINEMA

“கொடிய அரக்கன் செத்துட்டான்” நானா படேகர் மறைவால் கொந்தளிக்கும் தனுஸ்ரீ தத்தா.. அகில இந்திய திரைப்படத் தொழிலாளர் சங்கம் கடும் கண்டனம்..!!

Published

on

மூத்த நடிகர் நானா படேகர் காலமானதை அடுத்து, தன் வாழ்க்கையை நரகமாக்கிய கொடிய அரக்கன் இறந்துவிட்டதாக சமூக வலைதளத்தில் நடிகை தனுஸ்ரீ தத்தா பதிவிட்டுள்ளார். அவரது இந்த கடுமையான கருத்துக்கு அகில இந்திய திரைப்படத் தொழிலாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மறைந்த ஒருவரைப் பற்றி அவதூறாகப் பேசுவது மனிதநேயமற்றது என்று சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு ‘ஹார்ன் ஓக் ப்ளீஸ்’ படப்பிடிப்பின் போது நானா படேகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2018 ஆம் ஆண்டு மீ டூ இயக்கத்தின் போது தனுஸ்ரீ தத்தா வெளிப்படையாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த விவகாரம் இந்தியத் திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நடிகர் நானா படேகர் இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வந்தார்.

Advertisement

இதற்கிடையே, தனுஸ்ரீ தத்தா அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். எனினும், போதுமான சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் இல்லாததால் இவ்வழக்கை காவல்துறை முடித்து வைத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது நானா படேகரின் மறைவுக்குப் பிறகு தனுஸ்ரீ தத்தாவின் இந்தக் கருத்துகள் மீண்டும் சினிமா வட்டாரத்தில் விவாதப் பொருளாகியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in