இந்த முட்டாள்களுக்கு உண்மை நிலை புரியாது… யார் ஆளுங்கட்சியாக இருந்தது..? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா காட்டம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்த முட்டாள்களுக்கு உண்மை நிலை புரியாது… யார் ஆளுங்கட்சியாக இருந்தது..? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா காட்டம்..!!

Published

on

விசிக துணைப் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா, தேர்தல் தோல்விக்கு SIR தான் காரணம் என்று திமுக கூறுவது முற்றிலும் பொய் பிரசாரம் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். அப்போது தமிழகத்தில் இந்த திட்டத்தை அமல்படுத்தும் அதிகாரம் ஆளுங்கட்சியான திமுகவிடமே இருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு வாதாடியதை குறிப்பிட்ட அவர், ஆளுங்கட்சியாக இருந்த திமுக நீதிமன்றத்தில் இதற்காக வாதாடியதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மக்களின் உரிமைகளுக்காக திமுக எந்தவொரு உருப்படியான சட்டப் போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை என்பதை அவர் இதன் மூலம் அம்பலப்படுத்தியுள்ளார்.

Advertisement

மேலும், தேர்தல் சமயத்தில் சுமார் 1 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதற்கு திமுகவே முழுப் பொறுப்பு என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். அப்போது யார் ஆளுங்கட்சியாக இருந்தது என்று கூட தெரியாமல் பேசும் இந்த முட்டாள்களுக்கு உண்மை நிலை புரியாது என மிகக் காட்டமாக தனது சாடலை பதிவு செய்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in