அடக்கொடுமையே…! நடுக்கடலில் நடந்த பயங்கரம்.. கைவிடப்பட்ட கப்பலுக்குள் புகுந்த கும்பல்… உள்ளே காத்திருந்த கொடூரம்..! பதற வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடக்கொடுமையே…! நடுக்கடலில் நடந்த பயங்கரம்.. கைவிடப்பட்ட கப்பலுக்குள் புகுந்த கும்பல்… உள்ளே காத்திருந்த கொடூரம்..! பதற வைக்கும் பின்னணி..!!

Published

on

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மனோரி கடற்கரைக்கு அருகே பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாகக் கடந்த நான்கு மாதங்களாக வெளிநாட்டுக் கொடி ஏந்திய கப்பல் ஒன்று சிக்கியிருந்தது. இந்தச் சூழலில், கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு, அந்த கப்பலில் திருடும் நோக்கத்துடன் ஸ்பீட்போட் மூலம் 8 பேர் கொண்ட கும்பல் சென்றது. இதில் ஒரு நபர் படகிலேயே இருக்க, 7 பேர் கப்பலுக்குள் இறங்கினர். உயிரிழந்த நால்வரின் வயது 30-க்கும் குறைவாக இருக்கும் எனப் போலிஸார் தெரிவித்துள்ளனர்.

கப்பலுக்குள் சென்ற நபர்கள் கேஸ் கட்டரைப் பயன்படுத்தி கேஸ் பைப்பினை வெட்ட முயன்றனர். அப்போது, கப்பலின் அடைபட்ட பகுதியில் எதிர்பாராதவிதமாக நச்சுவாயு கசிவு ஏற்பட்டது. மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், அங்கு சென்ற நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து அந்த கும்பலைச் சேர்ந்த ஒரு நபர் கோராய் காவல் நிலையத்திற்குச் சென்று தகவல் அளித்த பிறகே வெளியில் தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து, வணிக கடற்படை ஊழியர்களின் உதவியுடன் தேடுதல் குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் கப்பலுக்குள் இறங்கி நான்கு சடலங்களையும் மீட்டனர். இந்த கும்பல் இதற்கு முன்பும் இரண்டு முறை அந்த கப்பலில் திருடியிருப்பதாகப் போலிஸார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக விபத்து மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ள கோராய் போலிஸார், வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள கப்பலின் உரிமையாளர் மீதும் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in