LATEST NEWS
“இந்தியர்கள் உயிரைப் பறிப்பவர்கள் அல்ல..” 174 பேரைக் காப்பாற்றிய கேப்டன் ஸ்மித்.. பிரதமர் மோடி உருகிய நெகிழ்ச்சி போன் கால்..!!!
துபாயில் இருந்து இஸ்ரேல் நோக்கிச் சென்ற ஃப்ளைதுபாய் விமானத்தைக் கடத்தி, நடுவானில் விபத்துக்குள்ளாக்க முயன்ற சக ஓமானி துணை விமானியின் கொடூரத் தாக்குதலை முறியடித்து, 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சார் அவர்களின் வீரத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாகப் பாராட்டியுள்ளார். கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையிலும், சாதுரியமாகச் செயல்பட்டு காக்பிட் கதவைத் திறந்து பயணிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியோடு தாக்குதல் நடத்தியவரை கேப்டன் ஸ்மித் மடக்கியுள்ளார். இந்தச் சம்பவத்தின் போது தனக்குக் தைரியம் கொடுத்தது எது என்று பிரதமரிடம் பகிர்ந்துகொண்ட கேப்டன் ஸ்மித், தான் அந்த இக்கட்டான இடியாப்பச் சூழலில் “அனுமன் சாலிசா” மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்ததாக உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் சிகிச்சை பெற்று வரும் கேப்டன் ஸ்மித்திடம், அவர் விரைவில் குணமடைய வாழ்த்திய பிரதமர் மோடி, இச்சம்பவம் வேறு மாதிரியாக முடிந்திருந்தால் இந்திய விமானிகளின் நற்பெயருக்குக் கலங்கம் விளைவிக்கப்பட்டிருக்கும், ஆனால் உங்களது துணிச்சலால் ஒட்டுமொத்த இந்திய விமானிகளின் கௌரவமும் காப்பாற்றப்பட்டுள்ளது என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தியர்கள் பிறர் உயிரைப் பறிப்பவர்கள் அல்ல, மற்றவர்களின் உயிரைக் காக்கத் தங்களின் உயிரையே பணையம் வைப்பவர்கள் என்பதை நாடு பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் என்றும் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். முன்னதாக, நேற்று கேப்டன் ஸ்மித்தின் பெற்றோர் மற்றும் மனைவியைத் தொடர்புகொண்டு பேசிய பிரதமர், அவர்களுக்குத் தேவையான அனைத்துத் தூதரக உதவிகளும் வழங்கப்படும் என உறுதியளித்திருந்தார்.
