குஷியோ குஷி.. இனி சனிக்கிழமை லீவ் தான்..! 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு தமிழ்நாடு அரசு போட்ட அதிரடி உத்தரவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குஷியோ குஷி.. இனி சனிக்கிழமை லீவ் தான்..! 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு தமிழ்நாடு அரசு போட்ட அதிரடி உத்தரவு..!!

Published

on

தமிழ்நாட்டில் 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் சனிக்கிழமை பணி ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வருகையில்லா ஆவணப்பதிவு விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாலும், சார்பதிவாளர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த 100 சார்பதிவாளர் அலுவலகங்களும் இனி வார நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) மட்டுமே செயல்படும்.

கடந்த ஆட்சிக் காலத்தில் சனிக்கிழமைகளிலும் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த சனிக்கிழமை கட்டாயப் பணி முறை கைவிடப்படுகிறது. சட்டப்பேரவையில் அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

பதிவுத்துறை “எங்கிருந்தும் பதிவு” என்ற இலக்கை நோக்கிச் செயல்பட்டு வருகிறது. சார்பதிவாளர்கள் ஆவணப் பதிவு மட்டுமின்றி பல்வேறு நிர்வாகப் பணிகளையும் கவனிக்க வேண்டியிருப்பதாலும், சனிக்கிழமைகளில் பணிபுரிவதால் அலுவலகப் பணிகளில் பின்னடைவு ஏற்படுவதாலும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், வருங்காலத்தில் அனைத்து ஆவணங்களும் வருகையில்லா பதிவு மற்றும் காகிதமில்லா முறையில் அனுமதிக்கப்பட உள்ளதால், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரம் பாதிக்கப்படாமல் இருக்க சனிக்கிழமை கட்டாயப் பணி ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in