Uncategorized
குஷியோ குஷி..! தீபாவளிக்கு மறுநாளும் பொதுவிடுமுறை.. தமிழக அரசு அறிவிப்பு..!!
2026-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான நவம்பர் 9-ஆம் தேதி திங்கள்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்குப் பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி நவம்பர் 8 (ஞாயிற்றுக்கிழமை) வருவதால், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று பண்டிகையைக் கொண்டாடிவிட்டு எளிதாகத் திரும்புவதற்காகப் பல தரப்பிலிருந்து வந்த கோரிக்கைகளை ஏற்று இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில், நவம்பர் 28-ஆம் தேதி சனிக்கிழமை அன்று தமிழ்நாட்டில் வழக்கம் போல் பணிநாளாகச் செயல்படும் என்றும் அரசு தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இந்த விடுமுறை நாளானது செலாவணி முறிச்சட்டம் 1881-இன் கீழ் வராது என்பதால், அவசர அலுவல்களை மேற்கொள்வதற்காகக் கருவூலங்கள் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு வழக்கம் போல் செயல்படத் தகுந்த ஏற்பாடுகள் செய்யுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்
