ஹோட்டல் அறையில் 4 மணி நேர மகிழ்ச்சி… திடீரென மிருகமாக மாறிய காதலன்.. 3 குழந்தைகளின் தாய்க்கு நேர்ந்த கொடூரம்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

Uncategorized

ஹோட்டல் அறையில் 4 மணி நேர மகிழ்ச்சி… திடீரென மிருகமாக மாறிய காதலன்.. 3 குழந்தைகளின் தாய்க்கு நேர்ந்த கொடூரம்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தின் பல்லப்கர் பகுதியில் உள்ள ‘ஒன் ஸ்டார் கெஸ்ட் ஹவுஸ்’ விடுதி அறை எண் 201-ல், காதலனுடன் தங்கியிருந்த சாந்தினி குமாரி என்ற 3 குழந்தைகளின் தாய், அதே காதலனால் சேலையால் கழுத்து நெரிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளியான சேகர் ராம் என்ற இளைஞன், கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். சம்பவத்தன்று விடுதி அறையில் இருவரும் சுமார் 4 மணி நேரம் மகிழ்ச்சியாகக் கழித்த நிலையில், சாந்தினி குமாரி தன்னிடம் தொடர்ந்து பணம் கேட்டு வற்புறுத்தியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த கொடூரக் கொலையைச் செய்ததாக அவன் வாக்குமூலம் அளித்துள்ளான்.

கொலை செய்யப்பட்ட பெண் ஏற்கனவே திருமணமானவர் என்பதும், கடந்த சில மாதங்களாக கணவரைப் பிரிந்து தனது 3 குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சூழலில் தான் இவருக்கும் சேகர் ராமுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. சம்பவத்தன்று சாந்தினி குமாரி விடுதி அறையில் சடலமாகக் கிடந்ததை அடுத்து, விடுதி நிர்வாகம் கொடுத்த தகவலின் பேரில் பல்லப்கர் காவல்துறையினர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, தப்பியோட முயன்ற கொலையாளி சேகர் ராமை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in