“எங்க அப்பாவை விட்டிடுங்க..” ரவுடிகளிடம் கைகூப்பிக் கதறிய மகள்கள்.. கண் முன்னாடியே துடிதுடித்த தந்தை.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!! – cinefeeds
Connect with us

Uncategorized

“எங்க அப்பாவை விட்டிடுங்க..” ரவுடிகளிடம் கைகூப்பிக் கதறிய மகள்கள்.. கண் முன்னாடியே துடிதுடித்த தந்தை.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டம் லுதௌரா கிராமத்தில், மனோஜ் கௌதம் என்ற நபர் அந்த ஊரைச் சேர்ந்த சில உள்ளூர் ரவுடிகளால் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த ஒட்டுமொத்த கொடூரச் சம்பவமும் அவரது மகள்களின் கண் முன்னாலேயே அரங்கேறியுள்ளது. தங்களது தந்தையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அந்தப் பெண் பிள்ளைகள் ரவுடிகளிடம் கதறி அழுது, கைகளைக் கூப்பிப் பிச்சை எடுக்காத குறையாகப் போராடியுள்ளனர். ஆனால், அந்த இரக்கமற்ற கும்பல் பெண்களின் அழுகுரலைச் சிறிதும் பொருட்படுத்தாமல் இந்தத் துணிகரப் படுகொலையைச் செய்து முடித்துள்ளது.

தங்களது தந்தை கண் முன்னாலேயே அடித்துக் கொல்லப்பட்டதைக் கண்டு, நிலைகுலைந்து போய் நிற்கும் அந்தப் பெண் பிள்ளைகளின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. அந்தப் பிஞ்சுக் குழந்தைகள் எந்த மாதிரியான ஒரு கடுமையான மன உளைச்சலையும், நரக வேதனையையும் அனுபவித்து வருவார்கள் என்பதை இப்புகைப்படம் விவரிக்கிறது. உத்தரப் பிரதேசத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போய்விட்டதை இந்தச் சம்பவம் காட்டுவதாகக் கூறி, நெட்டிசன்கள் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in