Uncategorized
“தீபாவளி கொண்டாட்டம் ஜெயிலில் தான்” அதுவரை ஜாமீன் கிடையாது.. ரூ. 400 கோடி லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஷின் ஜாமீன் தீர்ப்பு ஒத்திவைப்பு.. அதிர்ச்சியில் திமுகவினர்..!!!
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ. 400 கோடி லஞ்சம் வசூலித்ததாகக் கூறப்படும் புகாரில் கைதான திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. இதனால் தீபாவளிப் பண்டிகை வரை அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பில்லை எனப் பகிரப்படும் செய்திப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணையில், அன்பில் மகேஷ் தரப்பு மற்றும் காவல்துறை தரப்பு ஆகிய இருதரப்பு வாதங்களும் முழுமையாக நிறைவடைந்துள்ளன. காவல்துறையினர் ஜாமீன் வழங்கக் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை வரும் நவம்பர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி அன்பில் மகேஷைக் கைது செய்தனர். பள்ளிகளுக்கான நிரந்தர அங்கீகாரம் மற்றும் தரம் உயர்த்துதல் போன்ற பணிகளுக்குப் லஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு, தற்போது புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
