“ஐயோ காப்பாத்துங்க..” ஜாமீனில் வந்த போக்ஸோ மிருகம் செய்த வெறிச்செயல்.. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அண்டை வீட்டு இளைஞர்.. திடுக்கிடும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

Uncategorized

“ஐயோ காப்பாத்துங்க..” ஜாமீனில் வந்த போக்ஸோ மிருகம் செய்த வெறிச்செயல்.. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அண்டை வீட்டு இளைஞர்.. திடுக்கிடும் பின்னணி..!!

Published

on

கேரள மாநிலம் பெரும்பாவூரில் போக்ஸோ வழக்கில் ஜாமீனில் வெளிவந்த குற்றவாளி, தனக்கு எதிராக புகார் அளித்த சிறுமியின் வீட்டிற்குள் புகுந்து அவரது கழுத்தை அறுத்துக்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரக்கப்படியைச் சேர்ந்த முகமது அதினானன் (22) என்ற அந்த குற்றவாளி, சிறுமியை வீட்டை விட்டு வெளியே இழுத்து வந்து கத்தியால் கொடூரமாக தாக்கியுள்ளார். ஆபத்தான இந்தச் சூழலில் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அண்டை வீட்டு இளைஞர், உடனடியாக குறுக்கிட்டு குற்றவாளியைத் தடுத்து சிறுமியைப் பத்திரமாக மீட்டார். இந்த மோதலில் அந்த இளைஞருக்கும், தற்காத்துக் கொள்ள முயன்ற சிறுமிக்கும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

சிறுமியைக் கொலை செய்ய முயன்ற முகமது அதினானன், சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடி அருகில் இருந்த புதர்களுக்குள் மறைந்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பெரும்பாவூர் காவல்துறையினர், உள்ளூர் மக்களின் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். கைதான குற்றவாளி நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்ட நிலையில், அங்குள்ள கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்து குதித்து தப்பியோட முயன்றதால் லேசான காயங்களுடன் மீண்டும் போலீசாரால் சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in