Uncategorized
கடனைத் திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கும் இன்ப அதிர்ச்சி..! ரூ.75,000 தள்ளுபடித் தொகை வங்கிக் கணக்கில் வரவு – அரசின் அதிரடி அறிவிப்பு..!
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூ.75,000 வரை கடன் தள்ளுபடி வழங்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 01.05.2025 முதல் 31.03.2026 வரையிலான காலகட்டத்தில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்குக் கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். அதற்கு மேல் கடன் பெற்றவர்களுக்குத் தலா ரூ.75,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மேலும், இந்த அரசாணை வெளியிடப்பட்ட நவம்பர் 6-ஆம் தேதிக்கு முன்பாகவே தங்களது பயிர்க்கடனை முழுமையாகத் திருப்பிச் செலுத்திய தகுதியான விவசாயிகளுக்கும் உரிய தள்ளுபடித் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் மீண்டும் வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பகுதி தள்ளுபடி பெற்ற விவசாயிகள் தங்களது எஞ்சிய கடன் தொகையை நவம்பர் 30-ஆம் தேதிக்குள் செலுத்தி கணக்கை நேர் செய்தால், அதற்கான வட்டியையும் அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியான விவசாயிகள் தங்களது கூட்டுறவு சங்கங்களை அணுகி இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
