“இதுதான் சார் நல்ல மனசு” விபத்தைக் கண்டதும் காரை நிறுத்தி … வேட்டியைக் மடித்துக் கட்டி களமிறங்கிய மாஜி அமைச்சர்… சொந்த காரில் மருத்துவமனைக்கு அனுப்பி அதிரடி..!! – cinefeeds
Connect with us

Uncategorized

“இதுதான் சார் நல்ல மனசு” விபத்தைக் கண்டதும் காரை நிறுத்தி … வேட்டியைக் மடித்துக் கட்டி களமிறங்கிய மாஜி அமைச்சர்… சொந்த காரில் மருத்துவமனைக்கு அனுப்பி அதிரடி..!!

Published

on

தீபாவளி பண்டிகை நாளில் புதுக்கோட்டை அருகே நிகழ்ந்த இருசக்கர வாகன விபத்தில், உயிருக்கு போராடியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் செயல் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. புதுக்கோட்டையில் பல்வேறு அலுவல் பணிகளை முடித்துவிட்டு, விராலிமலை தொகுதிக்கு அவர் காரில் சென்று கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

https://media.getlokalapp.com/videos-bucket//posts/17416644/17416644_nUIytUh-tkh1Rrh8_transcode_1227805.mp4

Advertisement

அடப்பக்காரச் சத்திரம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், மூவர் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் சாலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். அந்த வழியாக வந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், உடனடியாகத் தனது காரை நிறுத்தச் சொல்லிவிட்டு, வேட்டியைக் மடித்துக் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கி காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார்.

அவர்களில் எல்லையப்பட்டியைச் சேர்ந்த முத்து என்ற இளைஞர் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்ததால், ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல், தனது சொந்த காரிலேயே அவரை ஏற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், லேசான காயங்களுடன் தப்பிய மற்ற இருவருக்கும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்ததுடன், அரை மணி நேரத்திற்கும் மேலாக சம்பவ இடத்திலேயே காத்திருந்து, மருத்துவர்களைத் தொடர்பு கொண்டு அவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in