Uncategorized
BREAKING: கே.என்.நேரு மீது வழக்கு பதிவு செய்யலாம்.. உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!!
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது. சுமார் 2,538 பணியிடங்களை நிரப்புவதற்காகக் கே.என்.நேரு ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாக அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் பின்னணியில் இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
முன்னதாக, இன்பதுரை தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, இந்த லஞ்சப் புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை முறைப்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தலாம் என்று உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் இந்த உத்தரவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்தச் சூழலில், தன் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளித்த தனி நீதிபதியின் உத்தரவிற்கு எதிராகக் கே.என்.நேரு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், கே.என்.நேருவின் கோரிக்கையை நிராகரித்து அவரது மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளதால், அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவதற்கான பிடி இறுகியுள்ளது.
