Uncategorized
“ஐயோ காப்பாத்துங்க” ஒருதலைக் காதலால் வெறிச்செயல்..! வேலை முடிந்து வீடு திரும்பிய பெண்ணை நடுரோட்டில் வழிமறித்து… இளைஞர் செய்த கொடூரச்செயல்..!!
மகாராஷ்டிர மாநிலம் அம்பர்நாத் பகுதியில், ஒருதலைக் காதலால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர் வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த பெண்ணை நடுரோட்டில் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை அம்பர்நாத் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள குருத்வாரா முன்பு, விசாகா கெய்க்வாட் என்ற பெண்ணை வழிமறித்த ஹேமந்த் குமானே என்ற இளைஞர் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் காயமடைந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள், உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாக்குதல் நடத்திய ஹேமந்த் குமானே அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அம்பர்நாத் காவல்துறையினர், தப்பியோடிய குற்றவாளியைப் பிடிக்க நான்கு தனிப்படைகளை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், குற்றப்பிரிவு போலீசாரும் இது குறித்துத் தனியாக விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
