அடக்கொடுமையே.. போலீஸ் வண்டியைப் பார்த்து பயந்து ஓடிய 2 பொறியியல் மாணவர்கள்.. அடுத்த நொடியே நேர்ந்த கொடூர கதி.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

Uncategorized

அடக்கொடுமையே.. போலீஸ் வண்டியைப் பார்த்து பயந்து ஓடிய 2 பொறியியல் மாணவர்கள்.. அடுத்த நொடியே நேர்ந்த கொடூர கதி.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

Published

on

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் மொயினாபாத் அருகே, நள்ளிரவில் ரோந்து வந்த காவல் வாகனத்தைக் கண்டு பயந்து ஓடிய இரு பொறியியல் மாணவர்கள், விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பெத்தமங்களாரம் கிராம எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் சில்கூர் பகுதியில் உள்ள கே.ஜி.ரெட்டி பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மோக்ஷா சரண் (20) மற்றும் யஷ்வந்த் (20) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கல்லூரி விழா முடிந்து திரும்பிய இம்மாணவர்கள், மேலும் 10 முதல் 12 மாணவர்களுடன் சேர்ந்து அந்தத் திறந்தவெளிப் பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. நள்ளிரவு சுமார் 2 மணியளவில் அந்தப் பகுதிக்குக் காவல்துறையின் ரோந்து வாகனம் வருவதைக் கண்ட மாணவர்கள், தங்களைப் பிடித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் அருகில் இருந்த விவசாய நிலங்களுக்குள் சிதறி ஓடியுள்ளனர். அப்போது, காட்டுப் பன்றிகளிடம் இருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக நிலத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்வேலித் கம்பிகளை இரு மாணவர்களும் எதிர்பாராதவிதமாகத் தொட்டதால், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in