“எனக்குத்தான் அனுபவம் இருக்கே..” ஒரு விநாடி ரீல்ஸ்… உயிரையே பறித்த பாம்பு கடி..! சோசியல் மீடியா மோகத்தால் நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

Uncategorized

“எனக்குத்தான் அனுபவம் இருக்கே..” ஒரு விநாடி ரீல்ஸ்… உயிரையே பறித்த பாம்பு கடி..! சோசியல் மீடியா மோகத்தால் நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!

Published

on

ஒடிசா மாநிலம் பூரி மாவட்டம் காந்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தபன் குமார் பிரதான் (28). பாம்புகளை பிடிப்பதில் அனுபவமிக்கவரான இவர், அப்பகுதியில் நூறுக்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்துள்ளார். மேலும், அவர் அந்த பாம்புகளுடன் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் பிடிபட்ட நல்ல பாம்பை கையில் வைத்துக் கொண்டு, தனது வீட்டின் வராண்டாவில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்துள்ளார். அப்போது அந்த பாம்பு திடீரென ஆக்ரோஷமடைந்து தபனின் விரல்கள், முழங்கை மற்றும் மேல் கை என அடுத்தடுத்து பல இடங்களில் கடித்தது.

பாம்பு கடித்தவுடன் அவர் உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவியாக ஒரு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், மேலும் 10 நிமிடங்கள் கழித்து மற்றொரு தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால், தனக்கு பாம்புகளைக் கையாண்டு பழக்கம் இருப்பதால் எதுவும் ஆகாது என்ற அதீத நம்பிக்கையிலும் அலட்சியத்தினாலும், 2-வது ஊசியைப் போடாமல் பாதியிலேயே மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

Advertisement

வீட்டிற்கு சென்ற சில மணி நேரங்களிலேயே அவரது உடலில் விஷம் ஏறி உடல்நிலை மிக மோசமடைந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை உடனடியாக பூரி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். சமூக ஊடகங்களில் ‘லைக்ஸ்’ மற்றும் ‘வியூஸ்’ வாங்குவதற்காக உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான முறையில் வீடியோ எடுப்பது எவ்வளவு பெரிய விளைவை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in