CRIME
“அடப்பாவி.. திருமண ஆசை காட்டி பலமுறை சீரழிவு..” 80 பெண்களின் அந்தரங்க வீடியோக்களை வெளிநாட்டுக்கு விற்ற ஜிம் மாஸ்டர்.. மொபைலை பார்த்து அதிர்ந்த போலீசார்.. பரபரப்பு சம்பவம்..!!
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டம் நாலசோபாரா பகுதியில், 23 வயது இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் ரீதியாகச் சுரண்டல் செய்த புகாரில் ஆரிஃப் அயூப் ஷேக் (22) என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். உடற்பயிற்சிக் கூடத்தில் ஏற்பட்ட பழக்கத்தைப் பயன்படுத்தி அந்தப் பெண்ணைக் காதல் வலையில் விழ வைத்த ஆரிஃப், அவரிடம் பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மேலும், ஆரிஃபும் அவரது தாயாரும் சேர்ந்து தன்னை மதம் மாறுமாறு வற்புறுத்தியதாகவும், ஆரிஃபின் உறவினரான சாஹில் என்பவர் தன்னைத் தாக்க முயன்றதாகவும் பாதிக்கப்பட்ட பெண் நாலசோபாரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட ஆரிஃபின் கைபேசியை ஆய்வு செய்தபோது, அதில் சுமார் 70 முதல் 80 பெண்களுடன் அவர் பாலியல் செயல்களில் ஈடுபடும் அதிர்ச்சியூட்டும் காணொளிகள் இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பல பெண்களைத் ஏமாற்றித் தனது காதல் வலையில் வீழ்த்திய ஆரிஃப், அவர்களின் அந்தரங்க வீடியோக்களை வெளிநாட்டு ஆபாச இணையதளங்களுக்கு விற்பனை செய்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. கைபேசியில் இருந்து சில முக்கியத் தரவுகள் அழிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், டிஜிட்டல் தடயவியல் பகுப்பாய்வு மூலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுமட்டுமன்றி, நவராத்திரி கொண்டாட்டங்களின் போது இந்துப் பெண்கள் குறித்து ஆரிஃப் ஆட்சேபனைக்குரிய மற்றும் அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறி அவர் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரு கடுமையான வழக்குகளின் பின்னணியில், வசாய் நீதிமன்றம் ஆரிஃப்பை அக்டோபர் 16 ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. உள்ளூர் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா (MNS) நிர்வாகிகளின் உதவியோடு பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், அனைத்து டிஜிட்டல் ஆதாரங்களையும் திரட்டி போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
