“மனிதர்களைத் தாண்டி இயந்திரமா..?!” 16 வயது சிறுமியைத் துரத்தித் துரத்தி வதைத்த ரோபோ.. சோசியல் மீடியாவில் லைவ் வீடியோ.. பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் உண்மை..!! – cinefeeds
Connect with us

CRIME

“மனிதர்களைத் தாண்டி இயந்திரமா..?!” 16 வயது சிறுமியைத் துரத்தித் துரத்தி வதைத்த ரோபோ.. சோசியல் மீடியாவில் லைவ் வீடியோ.. பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் உண்மை..!!

Published

on

ஜெர்மனியின் கொலோன் நகரில் உள்ள ஒரு துரித உணவகத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த 16 வயது சிறுமியை, 1.2 மீட்டர் உயரமுள்ள ரோபோ ஒன்று பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் விபரீதச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 11.45 மணியளவில் பரபரப்பான ஹோஹென்சோலெர்ன்ரிங் தெருவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சிவப்பு மற்றும் தங்க நிறத்திலான அந்த ரோபோ, சிறுமியைப் பின்னாடி இருந்து அணுகித் துன்புறுத்தியதோடு, இந்த முழுச் சம்பவமும் சமூக ஊடகங்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டதாக வெக்பெர்க் பகுதியைச் சேர்ந்த 16 வயது ரோபோ உரிமையாளரும், அவரது 19 வயது நண்பரும் காவல்துறையினரால் சந்தேகிக்கப்படுகின்றனர். இவர்கள் இருவரும் ரோபோவின் இந்த அத்துமீறலைத் தங்கள் கைபேசியில் வீடியோ எடுத்தது மட்டுமின்றி, அதற்குத் தகுந்தாற்போல் வர்ணனை வழங்கியதாகவும் புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சந்தேக நபர்களின் ஃபோக்ஸ்வேகன் செடான் காரின் பின்பகுதியில் இருந்து அந்த ரோபோவை அதிரடியாகக் கைப்பற்றினர்.

Advertisement

தற்போது இந்தச் சம்பவம் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த ரோபோவின் இயக்கங்கள் தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்பட்டதா, மற்றும் அந்தச் சிறுமியைத் துன்புறுத்தும் நோக்கத்துடன் அந்த இயந்திரம் வேண்டுமென்றே கையாளப்பட்டதா என்பது குறித்து போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். மேலும், விசாரணையின் ஒரு பகுதியாகச் சந்தேக நபர்கள் இருவரின் கைபேசிகளையும், அந்த ரோபோவையும் பறிமுதல் செய்துள்ள அதிகாரிகள், டிஜிட்டல் ஆதாரங்களை முழுமையாக ஆய்வு செய்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in