“கேப்டனை பத்தி பேச நீ யாரு..? உனக்கு என்ன அருகதை இருக்கு..?ஆதவ் அர்ஜுனாவை லெப்ட் ஹேண்ட்ல டீல் பண்ணுவேன்..!” TVK நிர்வாகிக்கு பிரேமலதா கொடுத்த கடுமையான வார்னிங்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கேப்டனை பத்தி பேச நீ யாரு..? உனக்கு என்ன அருகதை இருக்கு..?ஆதவ் அர்ஜுனாவை லெப்ட் ஹேண்ட்ல டீல் பண்ணுவேன்..!” TVK நிர்வாகிக்கு பிரேமலதா கொடுத்த கடுமையான வார்னிங்..!!

Published

on

தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் சுகன்யாவை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மூலனூர் நால்ரோடு பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “படித்த, பண்புள்ளவர்களுக்கு உங்கள் வாக்கா? அல்லது சுயநலத்திற்காக வாக்களிப்பதா? என்பதை சிந்தித்து முடிவு செய்யுங்கள்” என்றும், “தாராபுரம் தொகுதியை யார் முன்னேற்றுவார்கள், யார் நல்லது செய்வார்கள் என்பதை சிந்தித்து வாக்களிக்க வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் நேற்று முதலமைச்சர் பிரச்சாரம் செய்ததை சுட்டிக்காட்டிய அவர், “பாஜகவின் கிளைக் கழகம் தான் தவெக என மேடையில் அவரே ஒப்புக்கொண்டார். தவெக வேட்பாளர் சத்தியபாமா வாக்காளர்களுக்கு சத்தியமாக இல்லை, அதனால்தான் ஓட்டு கேட்கச் செல்லும்போது மக்கள் விரட்டி அடிக்கின்றனர்; வாக்களிக்கும்போதும் அவரை புறக்கணிக்க வேண்டும்” என்று விமர்சித்தார்.

இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தொகுதி மக்களுக்கு செய்யப்போகும் பணிகள் குறித்து பேச வேண்டும் எனக் குறிப்பிட்ட பிரேமலதா, “இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் தொகுதியை முன்னேற்ற மக்களுக்கு என்ன செய்வோம் என்பதை சொல்ல வேண்டும். ஆனால் ஆதவ் அர்ஜுனா கேப்டன் ஆத்மா என பேசுகிறார். பத்திரிகையாளர்கள் கேட்டதால் மட்டுமே அவருக்கு பதில் சொல்கிறேன், இல்லையென்றால் இதையெல்லாம் லெப்ட் ஹாண்டில் டீல் செய்து தட்டிவிட்டு சென்றிருப்பேன்” என்றார். ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக விமர்சித்த அவர், “கேப்டனைப் பற்றி பேச நீ யார்? நீ என்றாவது அவரை பார்த்துள்ளாயா? அவருக்கு உன்னுடன் என்ன சம்பந்தம்? மந்திரி இல்லை, அவர் முந்திரி. தேமுதிக கட்சி தான் கேப்டனின் ஆன்மா. கேப்டனை பற்றி பேசுவதை ஆதவ் அர்ஜுனா இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்” என எச்சரித்தார்.

Advertisement

தொடர்ந்து பேசிய பிரேமலதா, “நான் டீசன்டாக இருக்க விரும்புகிறேன். உண்மையை சொல், உரக்க சொல் என்று கேப்டன் எங்களுக்கு சொல்லிக் கொடுத்துள்ளார். விஜய் தம்பிக்கு வேண்டுமானால் கேப்டனை தெரியும், மற்ற யாருக்கும் கேப்டனைப் பற்றி பேச அருகதை இல்லை” எனத் தெரிவித்தார். மேலும், அரசின் அறிவிப்புகள் குறித்தும், கரூரில் உயிரிழந்த 41 பேருக்கு அஞ்சலி செலுத்தாதது குறித்தும் கடுமையாக விமர்சித்த அவர், “தாராபுரம் மக்கள் நியாயத்தின் பக்கம், திமுக பக்கம் நின்று துரோகத்திற்கு சவுக்கடி கொடுத்துள்ளார்கள் என்பதை நான் அக்டோபர் 9-ம் தேதி பார்க்க வேண்டும்” என்று கூறி தனது பிரச்சார உரையை முடித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in