“இந்தியன்னா சும்மாவா” ரத்தம் சொட்டச்சொட்ட 174 உயிர்களைக் காத்த இந்திய விமானி… மரண பயத்திலும் சதியை முறியடித்த மும்பை சிங்கம்.. யார் இந்த ஸ்மித் மச்சார்.?? – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இந்தியன்னா சும்மாவா” ரத்தம் சொட்டச்சொட்ட 174 உயிர்களைக் காத்த இந்திய விமானி… மரண பயத்திலும் சதியை முறியடித்த மும்பை சிங்கம்.. யார் இந்த ஸ்மித் மச்சார்.??

Published

on

துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி 174 பயணிகளுடன் பறந்த ‘பிளைதுபாய்’ (FZ1073) விமானத்தில், நடுவானில் விமானிகளுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் போது கத்திக்குத்து காயம் அடைந்த போதிலும், விமானத்தின் கேப்டனாக இருந்த இந்திய விமானி சாதுர்யத்துடன் செயல்பட்டு விமானத்தை தகர்க்கும் சதியை முறியடித்தார். அவரின் இந்த துணிச்சலான செயலால் 174 பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது.

பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய அந்த வீரமிக்க இந்திய விமானியின் பெயர் ஸ்மித் மச்சார் ஆகும். மும்பை நகரின் கத்கோபர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த இவர், வேலைக்காகத் துபாயில் வசித்து வருகிறார். நடுவானில் நடந்த இந்த அதிர்ச்சி சம்பவத்திற்குப் பிறகு, அவர் விமானியாவதற்குச் சந்தித்த சவால்கள் மற்றும் தனது பயணம் குறித்த நெகிழ்ச்சியான நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.

Advertisement

விமானத் துறையில் பணியாற்றுவது ஸ்மித் மச்சாரின் சிறுவயது கனவு அல்ல; தனது குடும்ப தொழிலான ஆடை வர்த்தகத்திலேயே ஈடுபட நினைத்து டெக்ஸ்டைல் என்ஜினீயரிங் படித்துள்ளார். அதன் பின்னர் மேலாண்மை படிப்பு படிக்கும் போது, தனது 19-வது வயதில் விமானியாக வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்துள்ளது. ஆனால், 17 ஆண்டுகளுக்கு முன்பு விமானத் துறை இவ்வளவு பிரபலமாக இல்லாததால், பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு அவரது தாயார் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துப் பயந்துள்ளார்.

இருப்பினும், அவரது தந்தை இந்த முடிவுக்கு எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் முழு மனதுடன் மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டுள்ளார். தாயாரின் அச்சத்தையும் மீறி தந்தையின் ஆதரவோடு விமானியாகப் பயிற்சி பெற்று சாதித்த ஸ்மித் மச்சார், இன்று நடுவானில் கத்திக்குத்து காயத்துடனும் போராடி 174 உயிர்களைக் காப்பாற்றி இந்தியாவின் பெருமையாக நிமிர்ந்து நிற்கிறார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in