“எதாவது செய்.. நீ இப்படி சாகக்கூடாது..” நடுவானில் நடந்த கொடூரத் தாக்குதல்… நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய இந்திய விமானியின் நெகிழ வைக்கும் பேட்டி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எதாவது செய்.. நீ இப்படி சாகக்கூடாது..” நடுவானில் நடந்த கொடூரத் தாக்குதல்… நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய இந்திய விமானியின் நெகிழ வைக்கும் பேட்டி..!!

Published

on

துபாயில் இருந்து கடந்த மாதம் 30-ந் தேதி 170-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குப் புறப்பட்ட ‘பிளைதுபாய்’ விமானத்தை இந்தியாவைச் சேர்ந்த விமானி ஸ்மித் மச்சார் இயக்கினார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, ஓமனைச் சேர்ந்த துணை விமானி திடீரென அவசரகால கோடரியால் விமானி ஸ்மித் மச்சாரை தாக்கினார். இந்த எதிர்பாராத தாக்குதலில் பலத்த காயமடைந்த நிலையிலும், விமானி ஸ்மித் மச்சார் சக விமானி மற்றும் பயணிகளின் உதவியுடன் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தார். விமானம் சவுதி அரேபியாவின் தபூக் நகரில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு, பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரக அரசு நடத்திய விசாரணையில், தாக்குதல் நடத்திய துணை விமானி விமானத்தைக் கடத்திச் சென்று இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலைய பயணிகள் முனையத்தின் மீது மோதி தற்கொலைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. தற்போது அபுதாபியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஸ்மித் மச்சார், அந்த பயங்கர சம்பவம் குறித்து ஐக்கிய அரபு அமீரக ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- “விமானத்தின் காக்பிட்டில் நான் கணினியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக எனது தலையின் பின்புறத்தில் பலத்த அடி விழுந்தது. இதனால் நிலைகுலைந்த நான் மயக்க நிலைக்குச் சென்று திரும்பினேன். அப்போது என் உள்மனதில், ‘ஸ்மித், எதாவது செய்… நீ இப்படியெல்லாம் இறந்துவிடக் கூடாது’ என்று எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன். அந்த தருணத்தில் என் உள்ளுணர்வு விழித்துக் கொண்டது. அதுதான் என்னையும், நூற்றுக்கணக்கான பயணிகளையும் காப்பாற்றியது.”

Advertisement

காயங்களுடன் போராடி தான் எப்படியோ காக்பிட் கதவை திறந்ததாகவும், உடனடியாக மற்ற ஊழியர்களும் பயணிகளும் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்திய ஓமன் துணை விமானியை மடக்கிப் பிடித்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும், அந்த இக்கட்டான சூழலில் விமானத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சவுதி அரேபியாவின் தபூக் நகரில் பாதுகாப்பாக தரையிறக்கிய சக விமானியின் துணிச்சலான செயலைத் தன் வாழ்நாளில் மறக்க மாட்டேன் என்றும் ஸ்மித் மச்சார் உருக்கமாகக் கூறினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in