CRIME
பகீர்.. மின்விசிறியில் தொங்கிய மனைவியின் சடலம்… பின்னணியில் கணவனின் பயங்கர பிளான்.. திருமணமான 3 ஆண்டுகளில் நேர்ந்த சோகம்…!!
உத்தரபிரதேச மாநிலம் கோண்டா பகுதியைச் சேர்ந்த ரித்தி சுக்லா என்ற இளம்பெண், அவரது கணவர் துர்கேஷ் சுக்லாவால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து ஒரு குழந்தையும் உள்ளது. திருமணத்திற்குப் பிறகு, துர்கேஷ் தனது மனைவி ரித்தியைக் குஜராத் மாநிலம் வதோதராவுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ரித்தியின் குடும்பத்தினரிடம் இருந்து வரதட்சணையாக இரண்டு கடைகளைப் பறிப்பதற்காக, அவர் மீது தொடர்ச்சியாகக் கடுமையான சித்திரவதைகளையும் அத்துமீறல்களையும் துர்கேஷ் நிகழ்த்தி வந்துள்ளார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று ரித்தியைக் கொடூரமாகத் தாக்கி, அவரது கையை உடைத்துக் கொலை செய்துள்ளார். இந்தக் கொலையை மறைப்பதற்காக, ரித்தியின் உடலை அறையின் மின்விசிறி கொக்கியில் தூக்கில் தொங்கவிட்டுள்ளார். பின்னர், அது தற்கொலை என்று கூறி, வதோதராவில் இருந்து ரித்தியின் சடலத்தைக் கோண்டாவில் உள்ள அவர்களது சொந்த வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார். இந்த வரதட்சணைக் கொலை சம்பவம் குறித்துப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
