அய்யோ கடவுளே..! தென்னை மரத்தில் அடித்த மின்னல்… வீட்டுக்குள் இருந்த 18 வயது மாணவன் பரிதாப பலி.. நெஞ்சை பதறவைக்கும் பகீர் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அய்யோ கடவுளே..! தென்னை மரத்தில் அடித்த மின்னல்… வீட்டுக்குள் இருந்த 18 வயது மாணவன் பரிதாப பலி.. நெஞ்சை பதறவைக்கும் பகீர் சம்பவம்..!!

Published

on

விழுப்புரம் அருகே வீட்டின் அருகில் இருந்த தென்னை மரத்தில் மின்னல் தாக்கியதில், வீட்டுக்குள் இருந்த 18 வயது பாலிடெக்னிக் மாணவர் உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள வி.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி மகன் ஸ்டாலின் (வயது 18). இவர் கப்பியம்புலியூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர், தனது தாய் சரிதாவுடன் (40) வீட்டில் இருந்தார்.

அப்போது அந்த பகுதியில் இடி-மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. இதற்கிடையே அவரது வீட்டின் சுவர் அருகில் இருந்த தென்னை மரத்தின் மீது திடீரென மின்னல் தாக்கியது. இதில் மரத்தின் அருகே வீட்டுக்குள் இருந்த ஸ்டாலினும் மின்னல் தாக்கியதில் பரிதாபமாக இறந்தார். வளவனூர் போலீசார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in