“எக்ஸாம் முடிச்சிட்டு வீட்டுக்கு வந்த புள்ள” வழியில் எமனாக பறந்து வந்த மாஞ்சா நூல்.. அடுத்த நொடியே பறிபோன 19 வயது மாணவன் உயிர்… துடிதுடிக்கும் பெற்றோர்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எக்ஸாம் முடிச்சிட்டு வீட்டுக்கு வந்த புள்ள” வழியில் எமனாக பறந்து வந்த மாஞ்சா நூல்.. அடுத்த நொடியே பறிபோன 19 வயது மாணவன் உயிர்… துடிதுடிக்கும் பெற்றோர்..!!

Published

on

கர்நாடக மாநிலம் பெலகாவி மகாந்தேஷ் நகரைச் சேர்ந்த துருவா சந்தோஷ் கர்ஜாகி (19) என்ற ஐடிஐ (ITI) மாணவர், நேற்று தனது கல்லூரித் தேர்வை எழுதிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். காந்தி நகர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் அவர் சென்றபோது, எதிர்பாராதவிதமாக காற்றில் பறந்து வந்த மாஞ்சா நூல் (கண்ணாடித் துகள்கள் பூசப்பட்ட பட்டம் விடும் கயிறு) அவரது கழுத்தில் சிக்கி, ஆழமான வெட்டுக் காயத்தை ஏற்படுத்தியது.

இதில் பலத்த இரத்தப்போக்கு ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தக் கொடூரச் சம்பவத்தைத் தொடர்ந்து, தடைசெய்யப்பட்ட ஆபத்தான மாஞ்சா நூல்களை விற்பனை செய்யும் கடைகள் மீது பெலகாவி வடக்கு போக்குவரத்து போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in