LATEST NEWS
அய்யோ கொடுமையே.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்..! கோயிலுக்குள் அதிவேகத்தில் புகுந்த எலக்ட்ரிக் கார்… அலறியடித்து ஓடிய மக்கள்… நெஞ்சை பதறவைக்கும் பகீர் வீடியோ..!!
பேங்காக்கின் சைனாடவுன் பகுதியில் உள்ள மிகவும் புகழ்பெற்ற “தியான் ஃபா அரக்கட்டளை” வளாகத்திற்குள் அமைந்துள்ள குவான்யின் ஆலயத்திற்குள், வியாழக்கிழமை மதியம் 1 மணி அளவில் திடீரென ஒரு எலக்ட்ரிக் கார் அதிவேகமாகப் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில் ஆலயத்திற்குள் வழிபாட்டிற்காகக் கூடியிருந்த மூன்று பேர் படுகாயமடைந்தனர். இதில் இருவருக்குப் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
காவல்துறை அதிகாரி அத்ஃபாபோல் தாரோக் மற்றும் சாட்சிகள் அளித்த தகவலின்படி, காரை ஓட்டிவந்த முதியவருக்கு உயர் ரத்த அழுத்தம் தொடர்பான உடல்நலக் கோளாறு இருந்துள்ளது. அவர் வாகனம் ஓட்டிக்கொண்டிருந்தபோதே திடீரென மயக்கமடைந்ததால், அவரது கால் தவறி காரின் ஆக்ஸிலரேட்டரை பலமாக அழுத்தியுள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த எலக்ட்ரிக் செடான் கார் வேகமாக ஆலயத்திற்குள் நுழைந்து அங்கிருந்தவர்கள் மீது மோதியது தெரியவந்துள்ளது.
இந்த விபத்தின் காரணமாக 68 ஆண்டுகள் பழமையான அந்த ஆலயத்தின் சில பகுதிகளும், அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களும் சேதமடைந்தன. இருப்பினும், காரானது சரியாகக் குவான்யின் பிரதான சிலையின் பீடத்தின் அருகே நின்றுவிட்டதால், பிரதான சிலைக்கு எந்தவிதச் சேதமும் ஏற்படாமல் தப்பியது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
