BREAKING: இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்… ஏசியன் கேம்ஸில் மீண்டும் அசத்தல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்… ஏசியன் கேம்ஸில் மீண்டும் அசத்தல்..!!

Published

on

ஏசியன் கேம்ஸ் வில்வித்தை போட்டியில் இந்திய ரெகர்வ் ஆண்கள் அணி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது. தென்கொரியாவுக்கு எதிரான விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் நீரஜ், யஷ்தீப் மற்றும் தீரஜ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி திறம்பட செயல்பட்டும் தோல்வியைத் தழுவியது. இதனால் தங்கப் பதக்க வாய்ப்பைத் தவறவிட்ட இந்திய அணி, வெள்ளிப் பதக்கத்தோடு தொடரை நிறைவு செய்துள்ளது.

இந்தத் தொடரில் இந்திய விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு பதக்கங்களைக் குவித்து வருகின்றனர். இதுவரை இந்தியா 12 தங்கம், 24 வெள்ளி, 34 வெண்கலம் என மொத்தம் 70 பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது. இந்தச் சிறப்பான செயல்பாட்டின் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் இந்தியா தற்போது 6-வது இடத்தில் நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in