CRIME
“வீட்டிற்குள் இவ்வளவு கோடிகளா..?” இரண்டு சகோதரிகள் வீட்டில் நடந்த அதிரடி வேட்டை.. போலீசாருக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி.. மிரளவைக்கும் பின்னணி…!!
மகாராஷ்டிர மாநிலம் வாஷிம் பகுதியில் உள்ள லாகாலா என்ற இடத்தில், கூட்டுறவுத் துறையினரும் காவல்துறையினரும் இணைந்து வட்டித் தொழில் செய்பவர்களுக்கு எதிராக அதிரடி சோதனை நடத்தினர். அங்கு வசித்து வரும் இரண்டு சொந்த சகோதரிகளின் வீட்டில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.13 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள 88 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
சட்டவிரோதமாக வட்டிக்கு பணம் கொடுத்து வந்த இந்த சகோதரிகளின் வீட்டில் இருந்து பூர்த்தி செய்யப்படாத வெற்று காசோலைகள் வெற்று பத்திரங்கள் மற்றும் வட்டி பரிவர்த்தனைகள் தொடர்பான கணக்கு பதிவேடுகள் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பெண் ‘கந்துவட்டிக்காரர்கள்’ குறித்த கூடுதல் விசாரணையை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
