CRIME
அதிர்ச்சி திருப்பம்..! பிரேமானந்த் மகாராஜ் சீடர் மரணத்தில் மர்மம்.. நடந்தது என்ன.? மாடியிலிருந்து குதிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு..!!!
உத்தரப்பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள குரு கிருபா குஞ் ஆசிரமத்தில், பிரபல ஆன்மீக குருவான பிரேமானந்த் மகாராஜின் சீடர் தீபக் லோதி என்ற ரசிக துலாரி சரண் (25) என்பவர் செப்டம்பர் 25, 2026 அன்று நான்காவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் இந்த சம்பவத்தின் சிசிடிவி (CCTV) காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, அவரது இறுதி நிமிடங்களில் நடந்த நிகழ்வுகள் குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளன
வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகளில், ரசிக துலாரி மொட்டை மாடியின் பக்கவாட்டுச் சுவரில் சில நொடிகள் அமர்ந்திருப்பதும், பின்னர் திடீரென தரையில் படுத்துவிட்டு, மீண்டும் எழுந்து சுவரில் ஏறி கீழே குதிப்பதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. ஆரம்பத்தில் இது சாதாரண தற்கொலை வழக்காகக் கருதப்பட்டாலும், காவல்துறையினர் அவரது அறையைச் சோதனை செய்தபோது கிடைத்த சில ஆதாரங்கள் இந்த வழக்கின் தீவிரத்தை அதிகமாக்கியுள்ளன. அவரது அறையிலிருந்து இரத்தக்கறை படிந்த டைல்ஸ் வெட்டும் இயந்திரம் கண்டெடுக்கப்பட்டதோடு, அவரது உடலின் ரகசியப் பகுதியில் பலத்த வெட்டுக்காயங்கள் இருந்ததும் பிரேதப் பரிசோதனையில் உறுதியானது.
இந்தக் கொடூரமான முடிவை அவர் ஏன் எடுத்தார் என்பதற்கான தெளிவான காரணங்கள் இன்னும் முழுமையாகக் கண்டறியப்படவில்லை. தீவிர மன உளைச்சல் காரணமாக அவராகவே தனது உடலை காயப்படுத்திக் கொண்டு பின்னர் மாடியிலிருந்து குதித்தாரா அல்லது இதன் பின்னணியில் வேறு ஏதேனும் சதி உள்ளதா என்ற கோணத்தில் மதுரா காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரது மொபைல் போனில் இருந்து நீக்கப்பட்ட குறுஞ்செய்திகள் (Deleted chats) மற்றும் டிஜிட்டல் தடயங்களை மீட்க தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
