“யானைக்கு வந்த சோதனையைப் பாருங்க..!” கழுத்தில் இருந்த ‘அந்த’ ஒரு பொருள்!” சில நாட்களாக அவதிப்பட்ட வேழம்.. வனத்துறையினர் செய்த நெகிழ்ச்சி காரியம்.. வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“யானைக்கு வந்த சோதனையைப் பாருங்க..!” கழுத்தில் இருந்த ‘அந்த’ ஒரு பொருள்!” சில நாட்களாக அவதிப்பட்ட வேழம்.. வனத்துறையினர் செய்த நெகிழ்ச்சி காரியம்.. வைரல் வீடியோ..!!

Published

on

அசாம் மாநிலம் கோலாகாட் பகுதியில், கழுத்தில் டிராக்டர் டயர் சிக்கியபடி சுற்றித் திரிந்த காட்டு யானை ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இந்த யானை தன் கழுத்தில் ஒரு பெரிய டயருடன் அவதிப்பட்டு நடமாடுவதை அந்த பகுதி மக்கள் கவனித்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, காசிரங்கா வனவிலங்கு மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு மையத்தின் மீட்புக் குழுவினர் மற்றும் கோலாகாட் பிரிவு அசாம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மீட்புக் குழுவினர், உள்ளூர் மக்களின் முழு ஆதரவோடு தீவிர முயற்சியில் ஈடுபட்டு அந்த காட்டு யானையின் கழுத்தில் இருந்த டிராக்டர் டயரை வெற்றிகரமாக அறுத்தெடுத்து அகற்றினர். டயர் அகற்றப்பட்ட பின்னர், யானைக்கு ஏதேனும் காயங்கள் உள்ளதா எனப் பரிசோதிக்கப்பட்டு, அது மீண்டும் பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் அனுப்பி வைக்கப்பட்டது. வனவிலங்கு ஆர்வலர்களும் பொதுமக்களும் இந்த சாதுரியமான மீட்புப் பணியைப் பாராட்டி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in