LATEST NEWS
“அய்யோ கடவுளே..” பழுதுபார்க்க நின்ற கப்பலில் திடீரென வெடித்த தீ.. 20 பேருக்கு நேர்ந்த விபரீதம்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!
சீனாவின் கிங்டாவோ நகரில் உள்ள பெய்ஹாய் கப்பல் கட்டும் தளத்தில் பழுதுபார்ப்பதற்காக நங்கூரமிட்டிருந்த வெளிநாட்டுச் சரக்குக் கப்பலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். லைபிரியா நாட்டின் கொடியுடன் இயங்கும் ‘ஓஷன் மெலடி’ என்ற அந்தப் பிரம்மாண்ட சரக்குக் கப்பலில் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது. விபத்து நடந்த சமயத்தில் கப்பலில் மொத்தம் 42 பணியாளர்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திடீரென கப்பலில் பற்றிய தீ, கட்டுப்பாடின்றி மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியதால் கப்பல் முழுவதும் கரும்புகையும் நெருப்புப் பிழம்புகளும் சூழ்ந்தன. இந்தத் தீ விபத்தில் சிக்கி 20 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மேலும் 5 பேரைக் காணவில்லை என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து குறித்துத் தகவல் அறிந்தவுடன் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கப்பலில் இருந்தவர்களில் 12 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட நிலையில், காயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
