“மனிதநேயம் எங்கே போனது..?” மாற்றுத்திறனாளி தம்பதியை கொடூரமாக தாக்கிய கும்பல்.. ஆனா காப்பாற்றாமல் மக்கள் செய்த காரியம்.. நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“மனிதநேயம் எங்கே போனது..?” மாற்றுத்திறனாளி தம்பதியை கொடூரமாக தாக்கிய கும்பல்.. ஆனா காப்பாற்றாமல் மக்கள் செய்த காரியம்.. நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த வீடியோ..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தின் சுமேர்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வார்டு எண் 5-ல், மாற்றுத்திறனாளி தம்பதியினர் அவர்களது அண்டை வீட்டாரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. ஒரு மாற்றுத்திறனாளி நபரை மூன்று பேர் சேர்ந்துகொண்டு இரும்புத் தடிகளாலும், செங்கற்களாலும் மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதனைத் தடுக்க வந்த அவரது மனைவியும் அண்டை வீட்டாரால் இரக்கமின்றி தாக்கப்பட்டுள்ளார்.

இந்தக் கொடூரமான தாக்குதல் சம்பவம் முழுவதையும் அங்கிருந்த சிலர் தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். மாற்றுத்திறனாளி தம்பதி தாக்கப்படும் இந்த நேரடி வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி தற்போது மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த மனிதாபிமானமற்ற செயலைக் கண்ட நெட்டிசன்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையான கண்டனங்களை எழுப்பி வருவதோடு, தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது காவல்துறை உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in