BREAKING: அதிமுக இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அதிரடி அறிவிப்பு..! மதுராந்தகம், தாராபுரத்தில் களமிறங்குவது யார்..?! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: அதிமுக இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அதிரடி அறிவிப்பு..! மதுராந்தகம், தாராபுரத்தில் களமிறங்குவது யார்..?!

Published

on

இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு முன்னாள் எம்.எல்.ஏ கணிதா சம்பத் என்பவரும், தாராபுரம் தொகுதிக்கு பானுமதி என்பவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதில் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் கணிதா சம்பத், ஏற்கனவே 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் அதிமுக சார்பில் இருமுறை களமிறங்கி எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்ற அனுபவம் கொண்டவர் ஆவார். மற்றொரு வேட்பாளரான பானுமதி, அதிமுகவின் மகளிர் அணியில் முக்கியப் பொறுப்பு வகித்து வருகிறார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in