செம மாஸ்..! நடிகர் அஜித் கார் பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்… லண்டனில் இணையும் தமிழ்நாட்டின் இரு துருவங்கள்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

செம மாஸ்..! நடிகர் அஜித் கார் பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்… லண்டனில் இணையும் தமிழ்நாட்டின் இரு துருவங்கள்..!!!

Published

on

பிரிட்டனில் நடைபெறும் சர்வதேச ‘மிசுலின் லெ மான்ஸ் கப்’ கார் பந்தயத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். லண்டனின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் சுற்றில் நடைபெறும் இந்த சர்வதேச பந்தயத்தில், நடிகரும் பிரபல ரேஸருமான அஜித்குமாரின் கார் பந்தயக்குழு (Ajith’s Racing Team) பங்கேற்கிறது. தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் செப்டம்பர் 10 முதல் 16 ஆம் தேதி வரை பிரிட்டன் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்த அரசுமுறைப் பயணத்தின் ஒரு பகுதியாக சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இப்போட்டியைத் தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்யின் லண்டன் பயணமும், சர்வதேச அளவில் தடம் பதிக்கும் நடிகர் அஜித்தின் கார் பந்தயமும் ஒரே நேரத்தில் அங்கு அமைந்திருப்பது பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. திரைத்துறையின் இந்த இரு மாபெரும் ஆளுமைகளும் லண்டனில் நேரில் சந்தித்துக் கொள்ளப் போகும் இந்த வரலாற்றுத் தருணம், ரசிகர்கள் மத்தியிலும் சமூக வலைத்தளங்களிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in