அஜித்தை லண்டன் போய் ஏன் கட்டிப்பிடிக்கிறீங்க..? இனி நீங்க கட்டிப்பிடிக்க வேண்டிய ஆள் யார் தெரியுமா..? ஆர்.பி.உதயகுமார் பேச்சால் தமிழக அரசியலில் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அஜித்தை லண்டன் போய் ஏன் கட்டிப்பிடிக்கிறீங்க..? இனி நீங்க கட்டிப்பிடிக்க வேண்டிய ஆள் யார் தெரியுமா..? ஆர்.பி.உதயகுமார் பேச்சால் தமிழக அரசியலில் பரபரப்பு..!!

Published

on

தமிழ்நாட்டில் அஜித்குமார் 40 வருடங்களாக இருக்கும்போது அவரை லண்டன் சென்றுதான் கட்டிப்பிடிக்க வேண்டுமா என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசிய பேச்சு தொண்டர்களிடையே பெரும் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், சினிமா பிரபலங்களை தங்களது அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்பவர்களை விமர்சிக்கும் தொனியில் இவ்வாறு நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களையும், தற்போதைய திமுக அரசின் செயல்பாடுகளையும் ஒப்பிட்டுப் பேசிய அவர், திடீரென சினிமா மற்றும் அரசியல் நகர்வுகள் குறித்துப் பேசத் தொடங்கினார். அப்போது, “அஜித் இங்கேயேதான் 40 வருஷமா இருக்காரு, இங்கயே கட்டிப்பிடிக்க வேண்டியதுதானே.. அதை விட்டுட்டு லண்டன் போய் கட்டிப்பிடிச்சிக்காறாங்க” என்று அவர் கூறியதும் கூட்டத்தில் இருந்தவர்கள் மத்தியில் பலத்த சிரிப்பலை எழுந்தது.

Advertisement

மேலும் தனது பேச்சைத் தொடர்ந்த ஆர்.பி.உதயகுமார், “இனிமே நீங்க கட்டிப்பிடிக்க வேண்டிய ஆள் தனுஷ் தான்” என்று அண்மைக்கால சினிமா மற்றும் அரசியல் நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி கலகலப்பாகப் பேசினார். அரசியல் மேடையில் சினிமா பிரபலங்களை ஒப்பிட்டு, தொண்டர்களைக் கவரும் வகையில் அதிமன்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in