“ப்ரோ ஜென்சி தலைமுறை வாழ்க்கைய இருட்டாக்கிடாதீங்க” ஆட்சிக்கு வந்த 6 மாசத்துல இப்படியா..? ஆர்.பி.உதயகுமார் காட்டம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ப்ரோ ஜென்சி தலைமுறை வாழ்க்கைய இருட்டாக்கிடாதீங்க” ஆட்சிக்கு வந்த 6 மாசத்துல இப்படியா..? ஆர்.பி.உதயகுமார் காட்டம்..!!

Published

on

அரசுப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் அவுட்சோர்சிங் முறையில் நிரப்ப முற்படும் தவெக அரசின் முடிவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐந்து லட்சம் இளைஞர்களுக்கு உள்ளாட்சிகளில் புதிய வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற தவெகவின் தேர்தல் வாக்குறுதியை நம்பியே ஜென்சி தலைமுறையினர் முதலமைச்சர் சி.எம். விஜயை அரியணையில் அமர்த்தினர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், இளைஞர்களின் எதிர்காலத்தை இருட்டாக்கும் வகையில் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமான OMCL முகமை மூலம் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்குத் தற்காலிகப் பணியாளர்களை நியமிப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் நிரந்தர ஊழியர்களுக்கும் தற்காலிக ஊழியர்களுக்கும் இடையே சலுகைகளிலும் பணிப் பாதுகாப்பிலும் பெரும் வேறுபாடுகள் தோன்றும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசுப் பணிகளை லட்சியமாகக் கொண்டு இரவு பகலாகப் படித்து வரும் லட்சக்கணக்கான போட்டித் தேர்வு மாணவர்களின் கனவுகளை இந்த ஒப்பந்த முறை சிதைத்துவிடும் என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

Advertisement

கடந்த வாரம் போட்டித் தேர்வுக்கான வயது வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்திவிட்டு, தற்போது அனைத்துப் பணிகளையும் தனியாருக்குத் தாரை வார்ப்பது என்பது “கண்ணைக் குருடாக்கிவிட்டு அழகான உலகத்தைக் காட்டுவது போல” உள்ளது என ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். அனைத்துப் பணிகளையும் அவுட்சோர்சிங் முறையில் நிரப்பினால் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) எதற்கு என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே, முதல்வர் விஜய் தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி, அரசுத் தேர்வாணையம் மூலமாகவே நிரந்தரப் பணியிடங்களை நிரப்பி சமூக நீதியைக் காக்க வேண்டும் என அவர் அந்த வீடியோவில் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in