அரைவேக்காடு..! தவெக-வை கைப்பற்ற ஆதவ் ரகசிய திட்டம்… விஜய் அடிச்சி விரட்டினா நடுத்தெருவில் நிப்பாரு… பகீர் கிளப்பிய ஆர்.பி.உதயகுமார்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அரைவேக்காடு..! தவெக-வை கைப்பற்ற ஆதவ் ரகசிய திட்டம்… விஜய் அடிச்சி விரட்டினா நடுத்தெருவில் நிப்பாரு… பகீர் கிளப்பிய ஆர்.பி.உதயகுமார்..!!

Published

on

தமிழக வெற்றிக் கழகத்தைக் கைப்பற்றுவதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ரகசிய திட்டம் தீட்டி வருவதாகவும், இந்த விஷயம் அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய்க்கு தெரியுமா என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். “அதிமுக கட்சி தவெகவுடன் இணைந்துவிட்டது” என்று ஆதவ் அர்ஜுனா அண்மையில் பேசிய கருத்து அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்திய நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆதவ் அர்ஜுனாவைக் கடுமையாக விமர்சித்து ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “அடிப்படை உண்மை தெரியாத அரைவேக்காட்டு அரசியல்வாதி ஆதவ் அர்ஜுனா” என்று சாடியுள்ளார். மேலும், தவெகவுக்கு வருவதற்கு முன்பாக அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து கட்சியில் ‘துணை பொதுச்செயலாளர்’ பதவி கேட்டதாகவும், ஆனால் எடப்பாடியார் அதனைத் தர மறுத்து திருப்பி அனுப்பிவிட்டதாகவும் அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.

Advertisement

திமுகவிலிருந்து விலகி, அதிமுகவிலும் இடம் கிடைக்காமல் போனதால்தான் அவர் தவெகவுக்குச் சென்று தற்போது ஒட்டுமொத்தக் கட்சியையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயல்கிறார் என்றும் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். ஒருவேளை தவெக தலைவர் விஜய் மட்டும் இவரைப் புரிந்துகொண்டு கட்சியிலிருந்து விரட்டி அடித்தால், ஆதவ் அர்ஜுனா வேறு எங்கும் செல்ல முடியாமல் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டும் என்றும் அவர் தனது வீடியோவில் மிகக் காட்டமாக எச்சரித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in