LATEST NEWS
சட்டமன்றம் முடிஞ்சிருச்சு.. இனி டைம் பாஸ் பிக்பாஸ் தான் பாக்குறேன்… மறைமுகமாக தாக்கிய உதயநிதி ஸ்டாலின்..!!
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மதுராந்தகம் பகுதியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசை மீண்டும் ஒருமுறை மிகக் கடுமையாக எள்ளி நகையாடியுள்ளார். அண்மைய சட்டமன்ற விவாதங்களை “என்டர்டெயின்மென்ட்” என விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த அரசியல் நையாண்டியை அவர் கையாண்டுள்ளார்.
மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்துவிட்டதே, இனி உங்களுக்கு பொழுதுபோக்குக்கு என்ன வழி என்று எனது நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். அதற்கு நான், ‘ஆமாங்க, சட்டமன்றம் முடிந்துவிட்டது, இனிமேல் நீங்கள் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பாருங்கள்’ என்று கூறிவிட்டேன்” எனப் பேசினார். தவெக அரசின் சட்டமன்ற செயல்பாடுகள் மற்றும் முதலமைச்சரின் பஞ்ச் வசனங்கள் அனைத்தும் ஒரு தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ போலத்தான் இருந்தது என்பதை மறைமுகமாகச் சாடி, அவர் பேசிய இந்த நக்கல் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் அரசியல் விமர்சனங்களுடன் வைரலாகி வருகிறது.
