LATEST NEWS
விஜய்யின் சாயம் கொஞ்சம் கொஞ்சமா வெளுத்து வருகிறது… தவெக அரசின் 100 நாள் சாதனை இதுதானா..? முதல்வரை வறுத்தெடுத்த ஆர்.பி உதயகுமார்..!!
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்று 100 நாட்களைக் கடந்துள்ள நிலையில், அதன் நிர்வாகத் திறமையின்மை காரணமாக பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். அத்தியாவசியப் பொருட்களின் தாறுமாறான விலை உயர்வைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தவெக அரசின் 100 நாள் சாதனையாக மக்கள் சந்திப்பது விலைவாசி உயர்வை மட்டும்தான் என்று சாடியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தவெக ஆட்சியில் காய்கறி, அரிசி மற்றும் பருப்பு வகைகளின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த திடீர் விலை உயர்வால் நடுத்தரக் குடும்பங்களும், குறிப்பாக இல்லத்தரசிகளும் பெரும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாகி இருக்கிறார்கள் என்று தெரிவித்தார். தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான பொருட்களின் விலையைக் கூடக் கட்டுப்படுத்த முடியாத முதலமைச்சர் விஜய்யின் சாயம் தற்போது வெளுத்து வருகிறது என்று ஆர்.பி. உதயகுமார் தனது விமர்சனத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
