LATEST NEWS
அடேங்கப்பா..! “கொஞ்சம் வண்டியை நிறுத்துங்கப்பா” அம்பானி வீட்டைப் பார்த்து மிரண்ட பெண்… டிரைவர் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. வீடியோ எடுத்த பெண்ணுக்குக் கிடைத்த ஷாக்..!!
இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இல்லமான ‘அந்திலியா’ மும்பையில் அமைந்துள்ளது. மிகவும் பிரம்மாண்டமான மற்றும் உலகப் புகழ்பெற்ற இந்த வீட்டின் பாதுகாப்பும் ஆடம்பரமும் எப்போதும் மக்களின் கவனத்தை ஈர்க்கக்கூடியவை. இந்நிலையில், ருச்சி சர்மா என்ற பெண்மணி தனது காரில் அந்திலியா வீட்டின் முன்னால் முதல்முறையாகக் கடந்து சென்றபோது, அந்த வீட்டின் பிரம்மாண்டத்தைக் கண்டு வியந்து தனது மொபைலில் வீடியோ எடுத்துள்ளார்.
காரில் சென்றவாறே அந்திலியாவை ரசித்த அந்தப் பெண், காரை கொஞ்சம் மெதுவாக நிறுத்திப் பார்க்கும்படி டிரைவரிடம் கோரியுள்ளார். ஆனால், அந்த வீட்டின் நுழைவாயிலில் நின்றிருந்த பாதுகாப்பு ஊழியர்களும் சிறப்புப் பாதுகாப்புப் படையினரும், காரில் இருந்த பெண்ணின் அசைவுகளையும் வீடியோ எடுப்பதையும் கவனித்து உடனே காரை நிறுத்தக் கூடாது எனச் சைகை செய்து முன்னோக்கிச் செல்லும்படி எச்சரித்துள்ளனர். டிரைவரும் “இங்கே காரை நிறுத்த அனுமதிக்க மாட்டார்கள்” எனக் கூறி காரை நிறுத்தாமல் அங்கிருந்து சென்றுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. “அம்பானி வீட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் பாதுகாப்பு ஊழியர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்” எனப் பலரும் வியந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். 27 அடுக்குகள், 49 படுக்கையறைகள், 168 கார்களை நிறுத்தும் பார்க்கிங் வசதி கொண்ட அந்திலியாவின் இந்த உயர் பாதுகாப்பு மற்றும் கறாரான நடைமுறை குறித்து இணையவாசிகள் பலரும் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
